நீலகிரி : காலநிலை மாற்றத்தால் பொழிந்த கடும்பனியால், தாழ்வான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உறைபனி தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும்பனி நிலவியது. இதன் காரணமாக தாவரவியல் பூங்காவின் புல்வெளிகள் வெண்ணிறமாகக் காட்சியளித்தது. இதேப் போலவே, படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும், அதீத பனிப்பொழிவினால் பயிரிடப்பட்டிருந்த கேரட் உள்ளிட்ட மற்ற காய்கறிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அரசு தாவரவியல் பூங்காவில் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாகவும், புறநகர் பகுதிகளில் இதைவிட குறைவாகவும் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.