டெல்லி : மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அ.தி.மு.க., எம்.பி.,க்கள் 24 பேரும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்த உள்ளதாக திருப்பூர் எம்.பி.சத்யபாமா தெரிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் தடுப்பணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு, கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அந்த அமளியில் அதிமுக எம்.பி.க்கள் காதிகங்களை வீசி எறிந்து எதிர்ப்பைக் காட்டினர்.

இதையடுத்து அ.தி.மு.க எம்.பி.க்கள் அன்வர் ராஜா, சத்யபாமா, பி.ஆர்.சுந்தரம், வனரோஜா, ஜெயவர்த்தன் உள்ளிட்ட 24 பேரை 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.
மேலும், மாநிலங்களவையில் மேகதாது விவகாரம் தொடர்பான விவாதத்தை நடத்தக்கோரி அமளியில் ஈடுபட்டதால் அதிமுக மற்றும் திமுக எம்.பி,.க்கள் அனைவரும் இன்று ஒரு நாள் மட்டும் அவையில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்த உள்ளதாக அதிமுக எம்.பி.,க்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து திருப்பூர் எம்.பி சத்யபாமா சிம்ப்ளிசிட்டியிடம் கூறுகையில், "நாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்த உள்ளோம். தற்போது எம்.பி.க்கள் நாடாளுமன்றம் நோக்கி புறப்பட்டுள்ளோம். அங்குள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்த உள்ளோம். அடுத்தகட்ட முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும்." என்றார்.