கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக சுங்கச்சாவடிகளில் வசூலான தொகை எவ்வளவு தெரியுமா?

டெல்லி: தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்ற தமிழக எம்.பி.,க்களின் கேள்விக்கு மத்திய அமைச்சரவை பதிலளித்துள்ளது.

டெல்லி: தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்ற தமிழக எம்.பி.,க்களின் கேள்விக்கு மத்திய அமைச்சரவை பதிலளித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடர், இம்மாதம் ஜனவரி 8-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த சூழலில் தமிழக சுங்கச்சாவடிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாய் வசூலான தொகை என்ன? என்பது குறித்த கேள்வியை அதிமுக-வைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்.பி பாரதி மோகன், திருவண்ணாமலை எம்.பி வனரோஜா, திருப்பூர் எம்.பி சத்யபாமா ஆகியோர் கூட்டாக கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு, மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. அதிமுக எம்.பி,.க்களின் கேள்விக்கு மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் மன்சுக்லால் மான்வியா பதிலளித்தார்.

அவர் கூறுகையில், "கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் கூடிய சுங்கச் சாவடிகளில் ரூ.9,842 கோடியே 30 லட்சம் வசூலாகியுள்ளது." என்று தெரிவித்தார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...