கோவை : சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்காக 'விழும்பு' என்ற அமைப்பை தொடங்கப்பட்டுள்ளது.

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர்களால், ஒதுக்கப்பட்ட பெண்கள் மற்றும் திருநங்கைகளை சமுதாயத்தில் மேம்படுத்தும் நோக்கில் இந்த 'விழும்பு' ஆலோசனை மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

"சமுதாயத்தில் உருவாகியுள்ள எண்ணங்களும், உணர்வுகளும் திருநங்கைகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. திறமையான மற்றும் வெளிப்படையான திருநங்கைகளை முன்னுதாரணமாகக் கொண்டு இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பால், தடம் மாறி செல்லும் திருநங்கைகளுக்கு சிறந்த வாழ்க்கையை கொடுக்க முடியும். எங்களது புதிய முயற்சிகளால், சமுதாயத்தில் ஓரங்கப்பட்டுள்ள திருநங்கைகள் கவரப்பட்டு, ஏதேனும் துறையில் அவர்கள் புகுந்து கொள்ள முடியும்," இவ்வாறு கூறினார் ஸ்ரீராம் அனாக்ஸ், விழும்பு உறுப்பினர்.

விழும்பு அமைப்பினரால், இதுவரையில் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட 8 பெண்களுக்கும், 2 திருநங்கைகளுக்கும் தையல் தொழில் துறையில் பணி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த டிசம்பர் 20-ம் தேதி ஏ.சி.சி தொழிலாளர்கள் மற்றும் புதிய தொழிலாளர்களுக்காக விழும்பு சார்பில் பன்முகத் திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையிலான பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.