புத்தாண்டு தினத்தில் மட்டும் உலகம் முழுவதும் 4 லட்சம் குழந்தைகள் பிறப்பு : இந்தியா முதலிடம்

புத்தாண்டு தினமான நேற்று மட்டும் உலகம் முழுவதும் 4 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. இதில், அதிகப்படியான எண்ணிக்கையைக் கொண்டு இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

புத்தாண்டு தினமான நேற்று மட்டும் உலகம் முழுவதும் 4 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. இதில், அதிகப்படியான எண்ணிக்கையைக் கொண்டு இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் முக்கிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2019ஆம் ஆண்டின் புத்தாண்டு தினத்தில் மட்டும் உலகம் முழுவதும் 3,95,000-க்கும் அதிகமான குழந்தைகள் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில், இந்தியாவில் மட்டும் சுமார் 70,000 குழந்தைகள் பிறக்கும் என்று கணிக்கப்பட்டது. 

இந்நிலையில், நேற்றைய புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் 3,95,072 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில், பாதிக்கும் மேலான எண்ணிக்கையை இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட 8 நாடுகள் பெற்றுள்ளன. இந்தியாவில் 69,944 குழந்தைகளும், சீனாவில் 44,940, நைஜீரியாவில் 25,685, பாகிஸ்தானில் 15,112, இந்தோனேசியாவில் 13,256, அமெரிக்காவில் 11,086, காங்கோ குடியரசில் 10,053, வங்கதேசத்தில் 8,428 குழந்தைகள் பிறந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

உலகில் மிகவும் வளர்ச்சியடையாத பகுதிகளில் 90% பிரசவங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதில், 20 லட்சம் குழந்தைகள் பிறந்த ஒரே நாளில் இறந்து விடுகின்றன. 26 லட்சம் குழந்தைகள் ஒரு வாரத்திற்குள் உயிரிழப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...