உதகை வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகள் ஆய்வு : 6 சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர்கள் பங்கேற்பு

நீலகிரி : நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், உதகையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் அலுவலர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

நீலகிரி : நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், உதகையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் அலுவலர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளும், கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியும், திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி சட்டமன்ற தொகுதியும், ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியும் உள்ளடக்கிய நாடாளுமன்ற தொகுதியாகும். 



நீலகிரி தொகுதியில் மொத்தம் 13 லட்சத்து 36 ஆயிரத்து 484 வாக்காளர்கள் உள்ளனர். 6 சட்டமன்ற தொகுதியில் 1413 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் ஒரே இடத்தில் எண்ணப்படவுள்ளது. இதற்காக, உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, 6 சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர்கள், எஸ்.பி., சண்முகப்பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் மற்றும் தேர்தல் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். 

இந்த ஆய்வின் போது, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாக்குகள் எண்ணும் மையங்கள் (அறைகள்), வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், பாதுகாப்பு வசதிகள், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தேவையான வசதிகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...