கோவையில் நடந்த அதிரடி சோதனையில் 486.5 கி பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் : ரூ. 53,500 அபராதம் விதிப்பு

கோவை : கோவை மாவட்டத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக பிளாஸ்டிக் பயன்படுத்தி வந்த கடைகளில் இருந்து ரூ. 53,500 அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும், 486.5 கிலோ மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை : கோவை மாவட்டத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக பிளாஸ்டிக் பயன்படுத்தி வந்த கடைகளில் இருந்து ரூ. 53,500 அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும், 486.5 கிலோ மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்தவோ, விற்கவோ தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத துணிப் பைகள், காகித தட்டுகள், வாழை இலைகளை பயன்படுத்துமாறு அனைத்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 



சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம், உணவு மற்றும் பாதுகாப்புத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கோவை மாநகராட்சி ஆணையர் கே. விஜயகார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள், கோவை மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களில் இருக்கும் கடைகள், ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, 486.5 கிலோ மதிப்பு எடையுள்ள பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், ஒருமுறை பயன்படுத்தக் கூடிய டம்ளர்கள், ஸ்டிரா (Straw) ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக, கிழக்கு மண்டலத்தில் 175 கிலோவும், தெற்கு மண்டலத்தில் 136.5 கிலோவும், மேற்கு மண்டலத்தில் 110 கிலோவும், மத்திய மண்டலத்தில் 50 கிலோ மற்றும் வடக்கு மண்டலத்தில் 15 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகள், ஓட்டல்கள் மற்றும் வணிகர்கள் ஆகியோரிடம் ரூ.53,500 அபராதம் விதிக்கப்பட்டது. 

இதனிடையே, பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டதையடுத்து, பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்களிடம் இருப்பு வைக்கப்பட்டிருந்த 331 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை கோவை மாநகராட்சியிடம் ஒப்படைத்தனர். 

"கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து கடைகளில் ஆய்வு நடத்தப்படும். மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்," இவ்வாறு கோவை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...