கோவை : திருப்பூர் மாவட்டத்தில் காணாமல் போன இரண்டு ஐம்பொன் சிலைகள், கருமத்தம்பட்டி அருகில் இருந்து போலீசார் மீட்டுள்ளனர்.

கருமத்தம்பட்டி அருகே உள்ள சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள காட்டுப் பகுதியில் 2 ஐம்பொன் சுவாமி சிலைகள் மர்மமாக கிடந்தது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் கருமத்தம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் அடிப்படையில், போலீசார் சாலையோரத்தில் பாழடைந்து கிடந்த வீட்டின் அருகே இருந்த 2 ஐம்பொன் சிலைகளை மீட்டனர்.

பின்னர் அருகே உள்ள காவல்நிலையங்கள் மூலம் சிலைகள் காணாமல் போன புகார் கொடுத்தவர்களை வரவழைத்தனர். இதையறிந்து, சுற்றுவட்டாரங்களில் இருந்து பொதுமக்கள், கோவில் நிர்வாகிகள் என பலர் கருமத்தம்பட்டி காவல்நிலையத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட பலகட்ட விசாரணையில், இந்த சிலைகள், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேணுகோபால் சுவாமி கோவிலில் கடந்த மாதம் திருடப்பட்ட சிலைகள் என்பது உறுதி செய்யப்பட்டது.
இரு சிலைகளும் இரண்டு அடி உயரமுள்ள வேணுகோபாலசாமி மற்றும் சத்தியபாமா சிலை என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, மங்கலம் போலீசார் கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.