கோவை : ஆலாந்துறை அருகே யானை தாக்கியதில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலாந்துறை அருகே உள்ளது செம்மேடு கிராமம். இங்கு எஸ்.செட்டி (70) என்ற முதியவர் வசித்து வந்தார். இவர், நேற்று விரகு பொறுக்குவதற்காக வனத்துறைக்கு சொந்தமான முள்ளன்காடு வனப்பகுதிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் இவரை காணாததால், உறவினர்கள் வனப்பகுதிக்குள் தேடி வந்தனர். அப்போது, அங்கு யானை தாக்கிய காயங்களுடன் செட்டி உயிரிழந்து கிடந்தார். பின்னர், இது தொடர்பான வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, செட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.