தூத்துக்குடி மக்களின் சுகாதாரநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் : தமிழக அரசுக்கு கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

கோவை : 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களின் சுகாதார நிலை பற்றி ஆய்வு செய்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவை : 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களின் சுகாதார நிலை பற்றி ஆய்வு செய்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை தூத்துக்குடி மாவட்டம் தெற்கு வீரபாண்டியபுரம், மீளவட்டான், பண்டாரப்பட்டி, குமார ரெட்டியாபுரம்,காயலூரணி உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த வியாபாரிகள், கடை உரிமையாளர்கள், தொழில் அமைப்பினர் இன்று நேரில் சந்தித்து மனு அளித்தனர். அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ள நிலையில், ஆலையை திறக்க புதிய தமிழகம் கட்சி ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் அதை நம்பி இருக்கும் ஏராளமானோர் வேலை இழந்து இருப்பதாகவும், ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய் உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது எனவும், ஆலை மூடப்பட்டதால் ஏராளமானோர் வேலை இழந்து இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :- ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இந்த ஆலை வருகிறது. அந்தத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்ததால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக, அந்தப் பகுதியை சேர்ந்த அமைப்புகளைச் சேர்ந்த பலர் இன்று என்னை சந்தித்து ஆலையை திறக்க ஆதரவு அளிக்க வேண்டும் என மனு அளித்ததுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர்மாசுபடுகின்றது, பாதிப்புகள் உண்டாகின்றது என்ற ஒரு கருத்தும், பாதிப்புகள் ஏதுவும் இல்லை, ஆலையை திறக்க வேண்டும் என மற்றொரு கருத்தும் மக்களிடையே நிலவுகின்றது. ஸ்டெர்லைட் ஆலை 1996-ல் திறக்கப்பட்டு 22 ஆண்டுகளில் அந்தப் பகுதி மக்களின் சுகாதார அளவுகோல் என்னவாக இருந்தது..? என்ன மாறுபட்டு இருக்கின்றது..? என்ன பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றது..? என ஆய்வு செய்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இந்தக் கோரிக்கை மாநில அரசுக்கு மட்டுமல்ல, மத்திய அரசிக்கும் வைக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து மக்களின் சுகாதாரம் குறித்து வெளிப்படையான வெள்ளை அறிக்கையினை வெளியிட வேண்டும். மேலும், மக்களின் கோரிக்கை தொடர்பாக விசாரித்து மத்திய, மாநில. அரசுகளுக்கு உரிய பரிந்துரை செய்வேன், இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...