Exclusive : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி முதல் தினமும் 110 பேருந்துகள் இயக்கம்

கோவை : பொங்கல் பண்டிகைக்காக வரும் ஜனவரி 10-ம் தேதி முதல் தினமும் வெளியூர்களுக்கு சுமார் 110 பேருந்துகளை இயக்க கோவை அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.


கோவை : பொங்கல் பண்டிகைக்காக வரும் ஜனவரி 10-ம் தேதி முதல் தினமும் வெளியூர்களுக்கு சுமார் 110 பேருந்துகளை இயக்க கோவை அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

ஜனவரி மாதம் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தொழில்நகரமான கோவைக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து வந்து தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர், சிலர் சொந்தமாக தொழில் செய்தும் வருகின்றனர். இதன் காரணமாக, பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோர் கோவையில் ஏராளம்.

கோவையிலிருந்து செல்லும் பயணிகளுக்கு பேருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்க கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, திருநெல்வேலி, ராமேஸ்வரம், மதுரை, தேனி, தூத்துக்குடி, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகளின் கூட்டத்தைப் பொறுத்து, ஜனவரி 10-ம் தேதி முதல் தினமும் 110 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், "வரும் ஜனவரி 10-ம் தேதி முதல் பொங்கலுக்கு வெளியூர் செல்வோருக்காக தினமும் 110 பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளோம். பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், மேலும் பேருந்துகளை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். அதேபோல, பயணிகளின் கூட்டம் குறையும் வரை இயக்க திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...