திருப்பூர் : திருப்பூர் அருகே இலவச மனை நிலப்பட்டா வழங்க ஒப்புக்கொண்டபடியே, விரைவில் பட்டா வழங்கக்கோரி தமிழ் மாநில விவசாயத்தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டத்தின் ஊத்துக்குளி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீர்நிலை புறம்போக்கு, சாலைப்புற போக்கு, வாடகை வீடுகளில் வசித்து வந்தவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் தனித்தனியாய் மனுக்கள் அளித்துள்ளனர். ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஆர்பாட்டம் மற்றும் ஊத்துக்குளி தாலுகா அலுவலகங்களில் குடியேறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனடிப்படையில் காங்கேயம்பாளையத்தில் 4.5 ஏக்கர் நிலத்தில் 32 நபர்களுக்குப் பட்டா வழங்க ஊத்துக்குளி வட்டாட்சியர் ஒப்புதல் அளித்தார்.

ஆனால், அதனைத் தாசில்தார் விநியோகிக்கவில்லை. இந்நிலையில், தற்போது ஒதுக்கப்பட்ட நிலம் வனத்துறைக்கு சொந்தமான இடம் என்பதால் வேறு இடம் பார்க்க வலியுறுத்தி, பட்டா வழங்கக் காலதாமதம் செய்கிறார் எனத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் மற்றும் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்