கோவை : உப்பிலிபாளையம் பகுதி மற்றும் வெள்ளக்கிணர் பகுதி திட்டங்களில் வீடு ஒதுக்கீடு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு வருகிற 4 -ம் தேதி குலுக்கல் முறையில் வீடுகள் தேர்வு செய்யப்படவுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தைச் சேர்ந்த கோவை வீட்டு வசதி பிரிவில் உப்பிலிப்பாளையம் பகுதி -2 (நிலை - 3) மற்றும் வெள்ளக்கிணறு பகுதி -2 ஆகிய பகுதிகளில் சுயநிதி திட்டங்களின் கீழ் குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டப்பட்டன. அதில் காலியாக உள்ள வீடுகளுக்குக் கடந்த நவம்பர் மாதம் 30 -ம் தேதி விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதையடுத்து, அந்த விண்ணப்பங்களுக்கான வீடுகள் வரும் 4 -ம் தேதி அன்று குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் படி, சிவானந்தா காலனி, டாடாபாத்தில் உள்ள செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர், கோவை வீட்டு வசதிப்பிரிவு அலுவலகத்தில் வைத்து காலை 11 மணியளவில் குலுக்கல் நடைபெறும்.
அந்த நிகழ்வுக்கு விண்ணப்பதாரர்கள் அனைவரும் வந்து கலந்து கொள்ளக் கோவை வீட்டு வசதி பிரிவு அலுவலர் கேட்டுக் கொண்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், தகவலுக்கு, 0422- 2493359 மற்றும் 9940498965 என்ற எண்ணை அணுகவும்.