நீலகிரி : காலநிலை மாற்றத்தால் பொழிந்த கடும்பனியால், தாழ்வான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உறைபனி தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும்பனி நிலவியது. இதன் காரணமாக தாவரவியல் பூங்காவின் புல்வெளிகள் வெண்ணிறமாகக் காட்சியளித்தது. புறநகர் பகுதிகளான பட் பயர், இந்து நகர், தலைக் குந்தா, பாலாடா, சோலூர், தும்மனாடா உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த கேரட் உள்ளிட்ட காய்கறிகள் பனிப் பொழிவினால் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், அரசு தாவரவியல் பூங்காவில் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாகவும், புறநகர் பகுதிகளான இந்து நகர், பட் பயர், தலைக் குந்தா பகுதிகளில் இதைவிடக் குறைவாகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடும் பனி பொழிவு காரணமாக காலை மாலை நேரங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.