சபரிமலையில் பெண்கள் ஐயப்பன் தரிசனம் : சுத்தப்படுத்தும் பணிகளுக்காக சன்னிதானம் மூடப்பட்டது

கேரள: சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு முறை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும்போதும் பல பிரச்சினைகள், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, ஐப்பசி பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டது.


கேரள: சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு முறை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும்போதும் பல பிரச்சினைகள், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, ஐப்பசி பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டது. 

இந்தச் சமயத்தில் பெண் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலர் சபரிமலைக்குள் நுழைய முயன்றனர். இதை எதிர்த்து, சந்நிதான வாயிலில் பக்தர்கள் பலர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், ஐம்பது வயதுக்கும் குறைவாக உள்ள இரண்டு பெண்கள் இன்று அதிகாலை 18 படி ஏறி சந்நிதானத்தில் சாமி தரிசனம் செய்துள்ளனர். 

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து, மலப்புரத்தைச் சேர்ந்த கனக துர்கா ஆகிய இரு பெண்களும் டிசம்பர் மாதம் சபரிமலை வந்து திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்கள் பம்பையிலிருந்து காவல்துறையின் அனுமதி பெற்று, பாதுகாப்புடன் மாற்று வழியில் சென்று சாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு மலை ஏறத் தொடங்கிய இவர்கள் இன்று அதிகாலை 3:45 மணியளவில் கோயிலுக்குள் நுழைந்து தரிசனத்தை முடித்துவிட்டு காலை 5 மணிக்குள் கீழே சென்றுள்ளனர். 

ஏற்கனவே, கோவிலிற்குள் பெண்கள் நுழைந்தால் கோவிலின் நடை இழுத்து மூடப்படும் என தலைமை தந்திரி கூறியிருந்தார். இதையடுத்து, பிந்து மற்றும் கனக துர்காவின் வருகையினால் கோவிலின் நடை தற்போது சுத்தப்படுத்தும் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...