கேரளா : பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் சபரிமலை சன்னிதானத்தில் 50 வயதுக்கு கீழ் உள்ள இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்தனர்.

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, சபரிமலைக்கு செல்ல பெண்கள் முயன்று வருகின்றனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால், அங்கு பதற்றம் நிலவுவதால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் சபரிமலை செல்ல முயன்று திருப்பி அனுப்பப்பட்ட இரண்டு பெண்கள், இன்று (ஜன.,2) அதிகாலை 3.45 மணியளவில் 18-ம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். அவர்களின் பெயர் பிந்து மற்றும் கனதுர்கா என தெரியவந்துள்ளது. இரண்டு பேரும் எந்தவித முன்னறிவிப்பின்றி, சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பினர். பாதுகாப்புக்கு வந்த போலீசார் சிலர் சீருடையிலும், சாதாரண உடையிலும் சென்றுள்ளனர். சாமி தரிசனம் செய்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பிந்து மற்றும் கனதுர்கா ஆகிய இருவரும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.