கோவையில் மூன்று நாட்கள் நடக்கும் 'ஈட் ஸ்ட்ரீட்' மெகா உணவுத் திருவிழா 4-ம் தேதி தொடக்கம்

கோவை : கோவை மாவட்ட ஓட்டல்கள் சங்கம் சார்பில் மூன்று நாட்கள் நடக்கும் 'ஈட் ஸ்ட்ரீட்' என்ற மெகா உணவு திருவிழா வரும் ஜனவரி 4-ம் தேதி தொடங்குகிறது.

கோவை : கோவை மாவட்ட ஓட்டல்கள் சங்கம் சார்பில் மூன்று நாட்கள் நடக்கும் 'ஈட் ஸ்ட்ரீட்' என்ற மெகா உணவு திருவிழா வரும் ஜனவரி 4-ம் தேதி தொடங்குகிறது. 

கோவை திருவிழாவின் ஒரு பகுதியாக, முதன்முறையாக கோவை கொடிசியா சாலையில் உள்ள திறந்த வெளியில் ஒரு மாபெரும் உணவு திருவிழாவிற்கு கோவை ஓட்டல்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. 'ஈட் ஸ்ட்ரீட்' (EAT STREET) என்ற பெயரில் நடத்தப்படும் இந்த மாபெரும் உணவு திருவிழா, வரும் ஜனவரி 4 முதல் ஜனவரி 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. இந்த நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை விதவிதமான உணவுகள் தயார் செய்யப்படுகின்றன.

கோவையில் வெற்றிகரமான மாபெரும் உணவு தயாரிப்பாளர்கள், அறுசுவை உணவு தருவோர், அணிதிரண்டு ஒரே இடத்தில் கூடி மக்களுக்கு ஒரு மாபெரும் அனுபவத்தை தரும் திருவிழாவை அளிக்கின்றனர். கோவை மண்ணுக்கே உரித்தான மணமிக்க சுவை மட்டுமின்றி, சுவையோடு இசையையும் செவிக்கு வழங்குகின்றனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான தனி மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கே உரிய பாரம்பரிய கலைகள் சிலம்பாட்டம், பொய்க் கால் குதிரை மற்றும் பரை, தப்பாட்டம் போன்றவை இடம் பெறுகின்றன. 

இந்த உணவுத் திருவிழாவிற்கு நுழைவு கட்டணமாக ரூ. 30 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டு களிப்பதோடு, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் சாம்பார் இட்லி, மட்டன் சுக்கா மற்றும் பிசாவிலிருந்து பிரியாணி வரை, மில்க் ஷேக், ஐஸ்க்ரீம் போன்றவையையும் சுவைக்கலாம்.

இவை தவிர, கிளி ஜோசியம், பெட்டிக்கடை போன்றவையும் இடம் பெறுகின்றன. இந்த தெருவில் நீங்கள் ஷாப்பிங் செய்யலாம். 100-க்கும் அதிகமான உணவகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. 7 அப் வழங்கும் தங்கமலை அதிர்ஷ்ட குலுக்கலை நடத்துகிறது. இதில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருவருக்கு தங்க நாணயம் பரிசு கிடைக்கும்.

மேலும் விபரங்களுக்கு, கோவை மாவட்ட ஓட்டல் சங்க செயலாளர் சிவக்குமாரை 9443266764 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...