கோவை : வால்பாறை அருகே மலைச்சரிவில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், ஆனைமலையைச் சேர்ந்த மருத்துவர் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை ஊசிமலை எஸ்டேட் தனியார் விடுதியில் பொள்ளாச்சி ஆனைமலையைச் சேர்ந்த கோவை டயாபட்டிஸ் மருத்துவமனையின் மருத்துவர் தியாகராஜன் (52), குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். இவர்கள், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வெள்ளமலையிலிருந்து, ஊசிமலைக்கு குறுகலான சாலையில் காரில் சென்றனர். காரை மருத்துவர் தியாகராஜன் காரை ஓட்டினார்.
மலைப்பாதையில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், தியாகராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் பயணித்த அவரது மகள், அண்ணன் பாலசுப்ரமணி (61), பேரன் சிலிசரன் (12) ஆகியோர் லேசான காயத்துடன் தப்பினர். இந்த விபத்து குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.