கோவை : பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக ஒருமுறைப் பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய துணிப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கி கோவை மாநகராட்சி ஆணையர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இந்தத் தடை இன்று முதல் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்தது. இதனிடையே, அனைத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சியின் சார்பில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், மாற்றுப் பொருட்களின் பயன்பாடு பற்றியும் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் பகுதியில் பேருந்து, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் ப. காந்திமதி ஆகியோர் ஒருமுறை பயன்படுத்தி எறியக் கூடிய பிளாஸ்டிக் பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.