கோவை : எஸ்.ஐ.எச்.எஸ். காலனி ரயில்வே மேம்பாலப் பணிகள் குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி, எஸ்.ஐ.எச்.எஸ். காலனியிலிருந்து ஒண்டிப்புதூர் பகுதியை இணைக்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணி மேற்கொள்ள கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி டென்டர் கோரப்பட்டு, ரூ. 21.16 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. 80 சதவிகித பணிகள் முடிவுற்ற சூழ்நிலையில், சேவை சாலை அமைப்பதற்காக நில எடுப்பு பணிக்கு, உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கினர்.
இதனிடையே, அப்பகுதியில் உள்ள நில உரிமைதாரர்கள் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி நீதிமன்ற இடைக்காலத் தடை பெற்றனர். இவ்வழக்கு தொடர்பாக பலமுறை உயர்நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டும், நீதிமன்ற இடைக்கால தடை இதுவரை நீக்கப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து, இச்சூழ்நிலையில், சுமார் ஏழு ஆண்டுகளாக நிலுவையிலுள்ள இப்பாலப்பணிகளை முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் உயரிய நோக்கத்தில், நேற்று இவ்வழக்கில் தொடர்புடைய நில உரிமையாளர்களையும், நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்துறை அலுவலர்களுடன் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனைக் கூட்டத்தை மேற்கொண்டார்.
நிலஉரிமையாளர்கள் உரிய இழப்பீட்டுத் தொகையினை பெற்றுக்கொள்ள ஒப்புதல் தெரிவித்ததன் அடிப்டையில், இவ்வழக்கின் அடுத்த விசாரணையின்போது, நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு நீதிமன்ற இடைக்கால தடை ஆணை நீக்கம் செய்யப்படும் பட்சத்தில், நீண்ட கால கோரிக்கையாக நிலுவையில் உள்ள எஸ்.ஐ.எச்.எஸ். காலனி ரயில்வே மேம்பாலம் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு புத்தாண்டு பரிசாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.