கோவை : ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து அந்நியப் பொருட்களை உடைத்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு வணிகர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு அனைத்து துறைகளிலும் ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவித்து வருகிறது. சில்லறை வணிகத்தில் 100% அன்னிய முதலீடு, சுயதொழில் மீதான தாக்குதல், உணவுப் பொருட்களுக்கு தரக் கட்டுப்பாடு போன்றவை சில்லறை வணிகத்தை நசுக்கி வருகிறது. உள்நாட்டு வர்த்தகத்தை முற்றிலும் பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே அந்நிய பொருட்களை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்நியப் பொருட்களை புறக்கணிக்கக் கோரியும், கோக், பெப்சியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனதாக கூறியும் அவர்கள் கூறினர். மேலும், ஆன்லைன் வர்த்தகத்தால் சுயதொழில் விற்பனை நலிவடைந்ததாகவும், வணிகர்களை காத்திட முடியாத வக்கற்ற மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோசங்களை எழுப்பினர்.

இதனிடையே, அந்திய வர்த்தகத்திற்கு எதிரான இரண்டாம் சுதந்திரப் போராக அந்நியப் பொருட்களை தீக்கிரையாக்குவோம் என்பதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முன்னெடுத்துள்ளதாக வெள்ளையன் தெரிவித்தார். மேலும், இன்று கோவையில் தொடங்கி ஜனவரி 6-ம் தேதி வரை தமிழகத்தின் ஆறு முக்கிய நகரங்களில் அந்நியப் பொருட்களை தீக்கிரையாக்கும் போராட்டம் தொடர இருப்பதாக அவர் கூறினார்.