நீலகிரியில் தோடர் இன மக்களின் 'மொற்பர்த்' என்ற புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டம்

நீலகிரி : உதகை அருகே முத்துநாடு மந்துவில் தோடர் இன மக்களின் சார்பில் 'மொற்பர்த்' என்ற பெயரில் புத்தாண்டு பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி : உதகை அருகே முத்துநாடு மந்துவில் தோடர் இன மக்களின் சார்பில் 'மொற்பர்த்' என்ற பெயரில் புத்தாண்டு பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், காட்டுநாயக்கர், பனியர், இருளர் மற்றும் குறும்பர் இன பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், தங்களின் பாரம்பரியம், கலாச்சாரம் மாறாமல் இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் உடை, உணவுமுறை, வழிபாட்டுமுறை, திருமணம், இறப்பு என தங்களின் அனைத்து வாழ்வியல் நிலையிலும், தங்கள் முன்னோர் விட்டுச் சென்ற பாரம்பரியத்தை பின்பற்றுகின்றனர்.



தோடர் இன மக்களின் தலைமைமந்தாக (தலைமையிடம்) கருதப்படும், உதகை அருகேயுள்ள முத்தநாடு மந்துவில், புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. மாவட்டம் முழுக்க உள்ள தோடர் மந்துகளில் வசிக்கும், தோடர் இனமக்கள் இவ்விழாவில் பங்கேற்றனர். முன்னதாக, தோடர் இன மக்களின் குலதெய்வ கோவிலில் உள்ள, 'மூன்பவ், அயன்ஓவ்' தெய்வங்களுக்கு வழிபாடு நடத்தினர்.

பின், ஒவ்வொரு குடும்பத்தினரும் தலைக்கு ஒரு ரூபாய் காணிக்கை செலுத்தினர். தங்களின் பாரம்பரிய உடையணிந்து, ஆடல், பாடலுடன் விழாவை கொண்டாடினர். நீலகிரி மாவட்டத்தின் பூர்வகுடிகளான இந்தப் பழங்குடியின மக்களின் 'மொற்பத்' என்ற புத்தாண்டு பண்டிகையை பலரும் கண்டு ரசித்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...