கோவை விமான நிலையத்தில் சரக்கு பெட்டக முனையம் உருவாக்குமாறு மத்திய அமைச்சரிடம் திருப்பூர் எம்.பி சத்தியபாமா மனு

கோவை: கோவை விமான நிலையத்தில் சர்வதேச விமான சேவைகளின் தொடர்பு மற்றும் சரக்கு பெட்டக முனையம் உருவாக்குமாறு மத்திய விமானப் போக்குசரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் திருப்பூர் எம்.பி சத்தியபாமா கோரிக்கை விடுத்தார்.

கோவை: கோவை விமான நிலையத்தில் சர்வதேச விமான சேவைகளின் தொடர்பு மற்றும் சரக்கு பெட்டக முனையம் உருவாக்குமாறு மத்திய விமானப் போக்குசரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் திருப்பூர் எம்.பி சத்தியபாமா கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக அவர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :- கோவை சர்வதேச விமான சேவைகளின் தொடர்பு இல்லாமல் இருப்பது பற்றி தங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். பெரும் எண்ணிக்கையிலான ஏற்றுமதியாளர்கள் சென்னை நகரத்திற்கோ அல்லது பெங்களூரு நகரத்திற்கோ செல்ல நேரிடுகிறது. அதே போல, பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த வியாபாரிகளும் திருப்பூருக்கு வர விமான சேவைகள் இன்றி அவதியுறுகின்றனர். ஏற்றுமதிகள் மற்றும் இந்தப் பகுதிக்கு சர்வதேச பயணிகளின் வரத்து அதிகரித்திருப்பது பற்றி கருத்தில் கொண்டு கோவை விமான நிலையத்தில் சர்வதேச விமான சேவைகள் வழங்கும் வசதிகளை நிறுவவேண்டியது காலத்தின் அவசியமாகும்.

கோவையில் சர்வதேச சரக்கு பெட்டக முனையம் அமைவது உபகரணங்கள் மற்றும் இதர பொருட்களை ஏற்றுமதி செய்ய பெரிதும் உதவியாக அமையும். எனவே, கோவை விமான நிலையத்தில் சர்வதேச சரக்குப் பெட்டகம் அமைய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். பின்னலாடைத் துறை சந்தித்து வரும் பிரச்சனைகளை கவனிக்கவும், ஏற்றுமதிகளை அதிகரிக்கவும். குறிப்பாக, பெண்களுக்கு அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை வழங்கவும் இந்த நடவடிக்கைகள் உதவும்.

எனவே கோவை விமான நிலையத்தில் சர்வதேச நகரங்களுடனான விமான சேவைத் தொடர்புகளை மேம்படுத்தவும், சர்வதேச சரக்குப் பெட்டக முனையம் ஒன்றை அமைக்கவும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உதவிட வேண்டும், இவ்வாறு திருப்பூர் எம்.பி சத்தியபாமா அளித்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...