கோவையில் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சி

கோவை : உக்கடம் பகுதியில் இன்று நடைபெற்ற விழாவில், ரூ.45 லட்சம் மதிப்பில் உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.

கோவை : உக்கடம் பகுதியில் இன்று நடைபெற்ற விழாவில், ரூ.45 லட்சம் மதிப்பில் உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில், உழைக்கும் பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் 183 பெண்களுக்கு செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இருசக்கர வாகனங்களை வழங்கினார். இத்திட்டத்தின் படி, 50 % மானியம் அல்லது ரூ.25 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த வாகனங்கள் அமைப்பு மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களில் பதிவு செய்த பெண்கள், அரசு திட்டங்களில் பணியாற்றும் பெண்கள், தனியார் நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள் மற்றும் கிராமப்புறங்களில் விவசாயம் மற்றும் விவசாயம் சாராத துறைகளில் சுயதொழில் செய்யும் உழைக்கும் மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது. 



இத்திட்டத்தின் கீழ் 18 முதல் 40 வயது வரையில் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள , ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்துக்குள் வருமானம் ஈட்டக் கூடிய பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதில் குறிப்பாக மிகவும் பின்தங்கிய பகுதிகள், மலைப்பகுதியில் வாழும் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவனை இழந்தோர் மற்றும் சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

இதையடுத்து, 2017-18ம் ஆண்டிற்கு கோவை மாவட்டத்தில் 22,965 பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. ஊரக பகுதியில் 6003 விண்ணப்பங்களும், நகர்புற பகுதியிலிருந்து 16,962 விண்ணப்பங்களும் பகுதி வாரியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பெறப்பட்ட விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வட்டார அளவிலான ஊராட்சி செயலாளர், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு செயலாளர்களைக் கொண்டு கள ஆய்வு செய்யப்பட்டு தேர்வுவாகிய பின் மானியம் வழங்கப்பட்டுள்ளது. 

கோவையில் 2017-18 ம் ஆண்டில் 4,949 உழைக்கும் மகளிருக்கு வாகனம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை 853 மகளிர்களுக்கு ரூ.1.77 கோடி மதிப்பில் மானிய விலையிலான இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இன்று 183 மகளிர்களுக்கு ரூ.45.61 லட்சம் மானியத்தில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், கலந்து கொண்ட செயலாக்கத்துறை அமைச்சர் பேசுகையில், "அனைத்துத் துறைகளிலும் வரலாறு காணாத வளர்ச்சிகள் கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. சாலைகள், மேம்பாலங்கள், தடையில்லா குடிநீர் என இனிவரும் நாட்களை எதிர்நோக்கி திட்டங்கள் தீட்டப்படுவதால், நீண்டகாலங்களுக்கு மக்கள் பயன் பெறலாம். மேலும், தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும். அனைவருக்கும் உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்," என்றார் செயலாக்கத்துறை அமைச்சர். 

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன். கே.அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஓ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுக்குட்டி, மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, மகளிர் திட்ட இயக்குநர் செல்வராசு, ஆவின் கூட்டுறவுத் தலைவர் கே.பி.ராஜூ மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...