காணிக்கை செலுத்தும் நிகழ்வுகளுடன் களை கட்டிய ஹெத்தை அம்மன் பண்டிகை : பக்தர்கள் பரவசம்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூரில், ஹெத்தை அம்மன் திருவிழாவை படுகர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய சிறப்பு வழிபாடுகளுடன், காணிக்கை செலுத்தி இன்று கோலாகலமாக கொண்டாடினர்.


நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூரில், ஹெத்தை அம்மன் திருவிழாவை படுகர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய சிறப்பு வழிபாடுகளுடன், காணிக்கை செலுத்தி இன்று கோலாகலமாக கொண்டாடினர்.

நீலகிரி மாவட்டத்தில் 300 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.  இதில் பேரகணி, ஜெகதளா, ஒன்னதலை, பெத்துவா, தாவணெ, குந்தா, சின்னகுன்னூர், எப்பநாடு, கேத்தி, பந்துமை, உயிலட்டி, நெடுகுளா, பெப்பேன், கூக்கல் ஆகிய 14 கிராமங்களில் ஹெத்தையம்மன் கோயில்களில் காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சிகளுடன் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. 



ஆண்டுதோறும் ஹெத்தையம்மன் கோயிலில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குலதெய்வ வழிபாட்டினை நடத்துவது வழக்கம். இவ்வாண்டுக்கான திருவிழா கடந்தவாரம் பேரகணியில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று ஜெகதளாவில் ஹெத்தையம்மன் வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான படுகர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய ஆடை அணிந்து கலந்து கொண்டனர். 



மேலும், இவ்விழாவில் பக்தர்கள் தேயிலை தோட்டங்களின் வழியாக நடனமாடி, கோயிலை வந்தடைந்தனர். ஓதனட்டி, பேரட்டி, மல்லிகொரை, மஞ்சுதளா, மேல் பிக்கட்டி, கீழ் பிக்கட்டி ஆகிய 8 கிராமங்களைச் சேர்ந்த ஹெத்தைக்காரர்கள் எனப்படும் பக்தர்களும் 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு பாரம்பரியமாக நடத்தும் பூஜைகளை நடத்தினர். 



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...