நீலகிரி : உதகையில் புத்தாண்டை முன்னிட்டு மது போதையில் வருபவர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் விழிப்புணர்வு குறும்படம் போட்டி காண்பிக்க உள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முக பிரியா தெரிவித்துள்ளார்.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உலக அளவில் சுற்றுலா ஸ்தலங்களில் புகழ்பெற்ற மாவட்டம் ஆகும். அங்கு வரும் சுற்றுலாப்பயணிகளை பாதுகாக்கும் வகையில், குடிபோதையில் வாகன ஓட்டி வரும் இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன் காரணமாக முக்கிய சாலைகளில் 17 மையங்கள் அமைக்கப்பட்டு விபத்து குறித்து குறும்படம் காட்டப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முக பிரியா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது :- கடந்த ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை சுமார் 27 லட்சம் சுற்றுலாப்பயணிகள் நீலகிரிக்கு வந்து சென்றுள்ளனர். இந்நிலையில் புத்தாண்டை கொண்டாடும் விதமாக தேனிலவு தம்பதியர்கள், கல்லூரி மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் என பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் உதகைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இதையடுத்து, நீலகிரிக்கு சுற்றுலா வரும் வாகன ஓட்டிகள் குடிபோதையில் வந்தால் அவர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் நாளை ஒரு நாள் மட்டும் குடிபோதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படம் காட்டப்படவுள்ளது.
இதற்காக , உதகை, குன்னூர், பந்தலூர், கோத்தகிரி உள்ளிட்ட 17 இடங்களில் குடிபோதையால் ஏற்படும் பாதிப்பு குறித்து குறும்படம் காண்பிக்கப்படவுள்ளது. மேலும், இது அவர்கள் பயணம் பாதுகாப்பாக இருக்கும் வகையில் அமையும். அத்துடன் புத்தாண்டையொட்டி பாதுகாப்பு பணியில் சுமார் 500 காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.