புத்தாண்டு இரவில் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் வாகனத்தைப் பறிமுதல் செய்வோம் : எச்சரிக்கும் கோவை போலீஸ்

கோவை: புத்தாண்டு தினத்தன்று இரவில் அதிவேகமாகவோ அல்லது மது போதையிலோ வாகனத்தை ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று கோவை மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: புத்தாண்டு தினத்தன்று இரவில் அதிவேகமாகவோ அல்லது மது போதையிலோ வாகனத்தை ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று கோவை மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கோவை மக்கள் தயாராகி வருகின்றனர். பொதுவாகப் புத்தாண்டன்று இரவு நேரத்தில் பெரும்படையாக திரளும் இளைஞர்கள் மது போதையில், அதிக வேகத்துடன் வாகனத்தை இயக்குவதால் விபத்துக்கள் தவிர்க்க முடியாத நிலையில் உள்ளது. இந்த சூழலில், இந்த புத்தாண்டை விபத்தில்லா புத்தாண்டாக கொண்டாடும் விதமாகக் கோவை மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன்படி தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், "இன்று இரவு புத்தாண்டு கொண்டாடும் விதமாக, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் அதி வேகமாகவும், ஆபத்தை விளைவிக்கும் விதமாகவும், குடி போதையிலும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், குடி போதையில் வாகனம் ஓட்டினால் வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, மேம்பாலங்கள் மீது பயணிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவை புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள சுமித் சரண் வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது போதையில் வரும் இளைஞர்களைப் பிடித்து அவர்களுக்கு அறிவுரை கூறி, போதை தெளிந்த பிறகு அவர்களை வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆனால், இதற்கு முன்னதாக காவல்துறையுடன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடலாம் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த உத்தரவானது கடந்த ஆண்டில் பெரியய்யா காவல் ஆணையராக இருந்த போது வெளியானது. தற்போது அவர் மேற்குமண்டல ஐ.ஜி. -ஆக பணியாற்றி வருகிறார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...