கோவை: சிங்காநல்லூர் அருகே கமலா மில் காலனி பகுதியில் வீடுகளில் புழுக்கள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அருகில் உள்ள பேக்கரியை முற்றுகையிட்டனர்.
கோவை: சிங்காநல்லூர் அருகே கமலா மில் காலனி பகுதியில் வீடுகளில் புழுக்கள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அருகில் உள்ள பேக்கரியை முற்றுகையிட்டனர்.

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் பேருந்துநிலையம் முன்பு அமைந்துள்ளது கமலா மில் காலனி. இதன் அருகே உள்ள ஸ்ரீ விக்னேஸ்வரா பேக்கரிலிருந்து வெளி வரும் சாக்கடை கழிவு நீர், அப்பகுதி சாக்கடையில் கலந்து வருகிறது. மேலும், உணவு கழிவுகளும் கலந்து வருவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றத்துடன் காணப்படுகிறது. இதனிடையே, வீடுகளுக்குள் புழு சென்றுவிடுவதாகவும் புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நா.கார்த்திக், தனது கட்சியினருடன் சென்று அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்விற்கு பிறகு பேக்கரி நிர்வாகியை அழைத்துப் பேசினார். இந்த பிரச்சினையை உடனடியாக சரி செய்ய வேண்டுகோள் விடுத்தார். அப்போது பேக்கரி நிர்வாகி மிரட்டல் தோனியில் பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள், தி.மு.க.,வினர் ஆத்திரமடைந்து பேக்கரி வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அந்தக் கட்டிடத்தின் உரிமையாளர் வி.வி.வாசன் சம்பவ இடத்திற்கு வந்து பேக்கரியை நிர்வாகியை மன்னிப்பு கேட்க வைத்தார். ஆகையால் அனைவரும் கலைந்து சென்றனர். மேலும், திமுக.,வினர் நடத்திய இந்த திடீர் போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.