கோவை : ஆங்கில புத்தாண்டு பண்டிகையையொட்டி கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் விபத்தில்லா புத்தாண்டை வரவேற்கும் வகையில் மாநகர காவல் துறை சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
கோவை : ஆங்கில புத்தாண்டு பண்டிகையையொட்டி கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் விபத்தில்லா புத்தாண்டை வரவேற்கும் வகையில் மாநகர காவல் துறை சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடிக் களிக்க பொதுமக்கள் அதிவேகமாக மற்றும் மதுபோதையில் வாகனத்தை இயக்குவது ஆகிய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற அலட்சியங்களால் விபத்தைகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் உத்தரவின் பேரில் சட்டம்-ஒழுங்கு துணை ஆணையாளர் எல். பாலாஜி சரவணன் மற்றும் போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித்குமார் ஐபிஎஸ் தலைமையில் போலீசார் குழு செயல்பட்டு வருகிறது.

இந்த காவல்துறை குழு, விபத்துகளைக் குறைக்க பல்வேறு விழிப்புணர்வுகளைச் செய்து வருகின்றனர். அதே போலவே, ஊடகங்கள் மற்றும் விளம்பர பேனர்கள் மூலம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, விழிப்புணர்வின் ஒரு பகுதியாக உதவி ஆணையாளர் ராஜ் கண்ணா தலைமையில், ஆய்வாளர்கள் சதாசிவம், சண்முகம் மற்றும் போக்குவரத்து காவலர்கள் இணைந்து விபத்தில்லா புத்தாண்டை கொண்டாட 5 ஆயிரம் நோட்டீஸ்கள் அச்சடித்துள்ளனர். இதைக் கோவை மாநகர சாலையில் செல்லும் ஓட்டுநர்களுக்குக் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.