கோவை : கீரணத்தம் அருகே வீடுபுகுந்து திருட முயற்சி செய்த 2 பேரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோவை : கீரணத்தம் அருகே வீடுபுகுந்து திருட முயற்சி செய்த 2 பேரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

சரவணம்பட்டியை அடுத்த கீரணத்தம் அருகே உள்ளது சிவசக்தி கார்டன். இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில், பொருட்களை விற்பனை செய்வது போலவும், தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து தருவதாகக் கூறி சில மர்ம நபர்கள் ரோந்து வந்து சென்றுள்ளனர். இதையடுத்து, கடந்த 3 தினங்களாக பூட்டியே கிடந்த வீட்டை குறித்து இன்று மதியம் 12 மணியளவில் இரண்டு பேர் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றனர்.
அப்போது, வீட்டின் உரிமையாளர்கள் வந்துவிட்டதால், இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களில் ஒருவரை அங்கு திரண்ட பொதுமக்கள் பிடித்தனர். பின்னர், அந்த நபரின் மூலம் மற்றொரு நபரையும் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து, இருவரையும் கயிறு மூலம் கட்டி வைத்தனர். அவர்களிடம் சோதனை செய்ததில், அடகு கடைகளில் நகைகளை அடகு வைத்தற்கான பல இரசீதுகளை வைத்திருந்தது. இதன்மூலம், வீடுகளுக்குள் புகுந்து நகைகளை திருடி, அவற்றை அடகு வைப்பதையே இவர்கள் தொழிலாளாகக் கொண்டிருப்பது உறுதியானது.
இதைத் தொடர்ந்து, கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இருவரையும் ஒப்படைத்தனர்.