நடைபாதைக் கடைகள் அமைத்துத் தர வலியுறுத்தி கோவை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

கோவை : நடைபாதைகள் அமைக்க முன்பணம் செலுத்திய அனைவருக்கும் கடைகள் கட்டித் தர வலியுறுத்தி கோவை மாநகர வியாரிகள் சங்கத்தினர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : நடைபாதைகள் அமைக்க முன்பணம் செலுத்திய அனைவருக்கும் கடைகள் கட்டித் தர வலியுறுத்தி கோவை மாநகர வியாரிகள் சங்கத்தினர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கடந்த 1995 -ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பின்படி, மாநகராட்சி நிர்வாகம் நஞ்சப்பா சாலையில் 125 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, கடந்த 2016 -ம் ஆண்டு சாலை விரிவாக்கம் செய்யப்படும் போது 20 ஆண்டுகளாக நடைபாதை வியாபாரம் செய்து வந்தவர்களின் கடைகள் அகற்றப்பட்டன. 

இதனிடையே, அவர்கள் மீண்டும் அதே இடத்தில் நடைபாதை கடைகள் அமைக்க அனுமதி கோரியதையடுத்து, மாமன்ற கூட்டத்தில் நபர் ஒன்றுக்கு ரூ.2250 வீதம் முன்பணம் செலுத்த கோரப்பட்டது. ஆகையால் 410 வியாபாரிகள் பணம் செலுத்தினர். இதற்கான ரசீதும் வழங்கப்பட்டது. 



மேலும், அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் மகேஸ்வரி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதனைத் தொடர்ந்து மாமன்ற கூட்டத்தில் கடைகள் அமைக்க ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றியது. நஞ்சப்பா ரோடு, பாரதியார் சாலை, வின்சென்ட் ரோடு ஆகிய இடங்களுக்கு மாநகராட்சி ஒதுக்கீடு செய்த நிலையில், நஞ்சப்பா ரோடு தவிர மற்ற இடங்களுக்குக் காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டது. 

இதனிடையே, உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், மாமன்ற தீர்மானத்தின் படியும் வியாபாரிகளுக்குக் கோவையில் நஞ்சப்பா ரோடு, பாரதியார் சாலை, டவுன்ஹால், உக்கடம், பூ மார்கெட் ஆகிய பகுதிகளில் முன்பணம் செலுத்திய அனைவருக்கும் கடைகள் கட்டி தர வலியுறுத்தி கோவை ஜில்லா நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...