கோவை : டவுன்ஹால் அருகே எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் மகனின் கார் ஓட்டுநருக்கும், மற்றொரு அ.தி.மு.க.வைச் சேர்ந்த வேன் ஓட்டுநரும் சாலையில் அடித்துக் கொண்ட சம்பவம் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனனின் மகன் கோபாலகிருஷ்ணன் இன்று பிற்பகல் 12.50 மணி அளவில் (TN37 CC 7) இனோவா காரில் டவுன்ஹால் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்தார். அந்த காரை இவரது நண்பர் ஓட்டி வந்த நிலையில், பின்னால் (TN10 W6667) அ.தி.மு.க. கொடியுடன் கூடிய காரில் வந்தவர், போன் பேசிக் கொண்டே வாகனத்தை ஓட்டுகிறாயா என கோபாலகிருஷ்ணனின் கார் ஓட்டுநரைப் பார்த்து கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து, இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருகட்டத்தில், ஆத்திரமடைந்த அவர், காரில் இருந்து இறங்கி வந்து கோபாலகிருஷ்ணனுடன் வந்தவரை தாக்கினார். மேலும், தான் சட்டமன்ற உறுப்பினரின் கார் ஓட்டுநர் எனவும் கூறியுள்ளார். இதையடுத்து, அங்கு இருந்தவர்கள் ஒன்று கூடியதால், அ.தி.மு.க. கொடியுடன் கூடிய காரை ஓட்டி வந்தவர் அங்கிருந்து கிளம்பி விட்டார். பொது இடத்தில் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் சண்டை போட்டு கொண்டது அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது.
பின்னர், சட்டமன்ற உறுப்பினரின் மகன் இதனை பெரிதுபடுத்தி செய்தி வெளியிட வேண்டாம் என்றும், ஒரே கட்சியை சேர்ந்த தங்களுக்குள் ஏதோ நடந்துவிட்டதாக கூறியபடி அங்கிருந்து கிளம்பினார்.