கோவை சரகத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் பன்மடங்கு அதிகரிப்பு

கோவை: கடந்த ஆண்டை ஒப்பிடும் போது கோவை காவல் சரகத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.


கோவை: கடந்த ஆண்டை ஒப்பிடும் போது கோவை காவல் சரகத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மேற்குமண்டல காவல்துறை துணைத்தலைவர் கார்த்திகேயன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கோவை மாவட்ட காவல்துறை சிறப்பாகச் செயலாற்றி குற்ற வழக்குகளைக் குறைத்து வருகிறது. கோவை காவல் சரகமானது திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது.

இந்த காவல் சரகத்தில், காவல்துறையின் தொடர் ரோந்து பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். கடந்தாண்டு சாலை விபத்துக்களில் 1970 பேர் உயிரிழந்திருந்த நிலையில் இந்தாண்டு 1309 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு கொலை வழக்குகள் 110 ஆக பதிவாகியிருந்தது. தற்போது 93 ஆக குறைந்துள்ளது. கொலை முயற்சி வழக்குகள் 78ல் இருந்து 67 ஆக குறைந்துள்ளது. 

மேலும், ஆதாய கொலைகளில் 70 சதவீத வழக்குகள் முடிவடைந்துள்ளது. அதில் 85 சதவீத பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், போக்சோ (சிறார் வன்கொடுமை தடுப்புச் சட்டம்) சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 91 வழக்குகள் பதிவாகியிருந்தது. தற்போது 131 வழக்குகளாக அதிகரித்துள்ளது." என்றார்.

சிறார் வன்கொடுமை குற்றங்கள் தொடர்பாகப் புகார் அளிக்கலாம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியதன் விளைவாக வழக்குகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகக் காவல்துறை விளக்கமளிக்கிறது. அதே நேரத்தில் மேற்கு மண்டலத்தில் கடந்த ஆண்டு 272 ஆக இருந்த போக்சோ வழக்கு எண்ணிக்கை தற்போது 305 ஆக உயர்ந்துள்ளது.

கோவை ஊரகப்பகுதியில் மட்டும் 32 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து, குழந்தைகளை பாலியல் சீண்டல்களில் இருந்து காக்க கோவை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்ட மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர், காவல்துறையினர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...