கோவை : சின்ன வெங்காயத்தின் சிலை வீழ்ச்சியால் பாதிப்படைந்த விவசாயிகள், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ வாங்கினால் இன்னொரு கிலோ இலவசம் எனக் கூவி விற்று நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, சின்ன வெங்காய விலை வீழ்ச்சியின் காரணமாக, விவசாயிகள் சின்ன வெங்காயத்தை விற்பனை செய்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் சுமார் 2000 விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது விளைச்சல் அதிகரித்து உள்ள நிலையில், சின்ன வெங்காயத்தின் விலை மிகவும் குறைந்து உள்ளதால், தங்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சின்ன வெங்காயத்தை ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கும், ஒரு கிலோ வாங்கினால் ஒரு கிலோ இலவசம் என்றும் கூறியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விற்பனை செய்தனர். இதனை ஏராளமான பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும் போது வெங்காயத்தைச் சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டால் யாருக்கும் பலனில்லாமல் போகும் என்பதால், விளைவித்த வெங்காயத்தை பொதுமக்கள் பயன்படுத்தட்டும் என்ற நோக்கில் விற்பனை செய்தோம் என்றனர்.
இதனிடையே, விலை நிர்ணயம் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.