கருணை கொலை செய்து உடலை மருத்துவ மாணவர்களுக்கு வழங்குங்கள் : மனமுடைந்த முதியவர் மனு

கோவை : கருணை கொலை செய்து உடலை மருத்துவ மாணவர்களுக்கு வழங்கக்கோரி நிலத்தைப் பறிகொடுத்த முதியவர் கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார்.


கோவை : கருணை கொலை செய்து உடலை மருத்துவ மாணவர்களுக்கு வழங்கக்கோரி நிலத்தைப் பறிகொடுத்த முதியவர் கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா கோடாங்கி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (76). இவர், அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது பாட்டி கருப்பாத்தாளுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் விவசாய நிலத்தை அவரது பேரன் கந்தசாமிக்கு கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், இந்த மூன்று ஏக்கர் நிலத்தை, தி.மு.க.வைச் சேர்ந்த சன் ராஜேந்திரன் மற்றும் மேட்டுப்பாளையம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்து விட்டதாகக் கூறினார். 

தற்போது, அந்த நிலம் பலரிடம் கைமாறி வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்து வருவதாக அவர் தெரிவித்தார். கடந்த 2006-ம் ஆண்டு முதல் இந்த நிலத்தை மீட்க முதலமைச்சர் முதல் அனைத்து அதிகாரிளிடமும் புகாரளித்து போராடி வருவதாகக் கூறினார். ஆனால், அரசியல் பின்பலத்தால் தனது மனுவைப் பெற அதிகாரிகள் மறுப்பதால், தன்னை கருணை கொலை செய்து உடலை, மருத்துவ மாணவர்களின் படிப்புக்கு வழங்கிட வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...