கோவை : புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, கோவை மாநகரில் 1,200 போலீசாரும், புறநகர் பகுதிகளில் 800 போலீசாரும் என மொத்தம் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை : புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, கோவை மாநகரில் 1,200 போலீசாரும், புறநகர் பகுதிகளில் 800 போலீசாரும் என மொத்தம் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க மாவட்டம் முழுவதும் போலீஸார் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை மாநகரில், காவல் ஆணையர் சுமித்சரண் தலைமையின் கீழ் 1,200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, கலைநிகழ்ச்சி நடத்தவும் நட்சத்திர ஓட்டல்களுக்கு போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மதுபோதையில் வரும் வாகன ஓட்டுநர்களை பிடிக்கவும், விபத்துகளை தடுக்கவும், 22 இடங்களில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அதேபோல, புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் மாநகரை அடுத்த பல்வேறு பகுதிகளில் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையின் கீழ் 800 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இதில், அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துபவர்கள் மற்றும் மதுபோதையில் பொதுமக்களுக்கு இடைஞ்சல்கள் ஏற்படுத்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் முடிவெடுத்துள்ளனர்.