கோவையில் 3 ஆயிரம் பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை : 3 ஆயிரம் பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 18.70 கோடி மதிப்பில் தாலிக்குத் தங்கத்துடன் கூடிய திருமண நிதி உதவித் தொகையை செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

கோவை : 3 ஆயிரம் பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 18.70 கோடி மதிப்பில் தாலிக்குத் தங்கத்துடன் கூடிய திருமண நிதி உதவித் தொகையை செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். 



கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சமூக நலத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், 3 ஆயிரம் பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 18.70 கோடி மதிப்பில் தாலிக்குத் தங்கத்துடன் கூடிய திருமண நிதி உதவித் தொகை மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் வைப்புநிதி பத்திரங்களைப் பயனாளிகளுக்கு வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன, மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன், மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ், அம்மன் கே.அர்ச்சுனன், எட்டிமடை ஏ.சண்முகம், ஆர்.கனகராஜ், கஸ்தூரிவாசு, மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது :- ஒரு நாட்டின் முன்னேற்றமானது பெண்களின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டது என அறிந்து தான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா பெண்கள் நலன்காக்கும் வகையில் திருமண நிதி உதவி வழங்கும் திட்டம், உழைக்கும் மகளிருக்கு மானிய விலையிலான ஸ்கூட்டர் வழங்கும் திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், கர்ப்பிணிகளுக்கு 18 ஆயிரம் நிதி உதவி, ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால் அக்குழந்தைகளின் வங்கிக் கணக்கில் ரூ. 25 ஆயிரம் வைப்புத் தொகை, ஆதரவற்ற பெண்களுக்கு கறவை மாடு, 4 ஆட்டுக் குட்டிகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினார். 

அரசு இத்திட்டங்களை எல்லாம் தொடர்ந்து முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. கோவை மாவட்டத்தில் 2016 -ம் ஆண்டில் இருந்து தற்போது வரையில் 4,331 பயனாளிகளுக்கு ரூ. 27.42 கோடி மதிப்பில் 8 கிராம் தங்கத்துடன் கூடிய திருமண நிதி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது, பட்டம், பட்டயப் படிப்பு படித்த 2,070 பெண்களுக்குத் திருமண நிதி உதவித் தொகையாக தலா ரூ. 50 ஆயிரம், பத்தாம் வகுப்பு படித்த 930 பெண்களுக்குத் திருமண நிதி உதவித் தொகையாக தலா ரூ. 25 ஆயிரம் என மொத்தம் 3 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ. 12.67 கோடி மதிப்பில் திருமண நிதி உதவி, ரூ. 6.2 கோடி மதிப்பில் தலா 8 கிராம் தங்கம் என மொத்தம் ரூ. 18 கோடியே 70 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், கோவை மாவட்டத்தில் 50 ஆண்டு காலத்தில் இல்லாத அளவிலான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது," இவ்வாறு அவர் பேசினார்.

 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...