நீலகிரியில் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வந்த மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினர்

நீலகிரி : குன்னூர் அருகே வீட்டு வளர்ப்பு பிராணிகளை வேடையாடி வந்த 13 அடி நீளமுள்ள மலைப் பாம்பை வனத்துறையினர் பிடித்ததால், அப்பகுதி மக்கள் நிம்மதிடைந்தனர்.

நீலகிரி : குன்னூர் அருகே வீட்டு வளர்ப்பு பிராணிகளை வேடையாடி வந்த 13 அடி நீளமுள்ள மலைப் பாம்பை வனத்துறையினர் பிடித்ததால், அப்பகுதி மக்கள் நிம்மதிடைந்தனர்.



குன்னூர் அருகே உள்ள தைமலை பகுதியில் குடியிருப்பு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் 13 அடி நீளமுள்ள மலைபாம்பு, அவ்வப்போது வந்து வீட்டில் வளர்க்கும் பிராணிளை வேட்டையாடி வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். குன்னூர் வனச்சரகர் பெரியசாமி உத்தரவின் பேரில், வனவர் பெலிக்ஸ் தலைமையில் வனக்காப்பாளர் குபேந்திரன் மற்றும் வனக்காவலர் ராம்குமார் மற்றும் லோகஸ்வரன் ஆகியோர் மலைப்பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் இறையைத் தின்று நகரமுடியாமல் விவசாய நிலத்தில் கிடந்த மலைப்பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...