சிங்காநல்லூர் குளத்தின் பல்லுயிர் தன்மையை கவுரவப்படுத்தும் விதமாக அஞ்சல் முத்திரை மற்றும் உறை வெளியீடு

கோவை : சிங்காநல்லூர் குளத்தின் பல்லுயிர் தன்மையை கவுரவப்படுத்தும் வகையில் 'நகரத்தின் சொர்க்கம், சிங்கநல்லூர் குளம்' என்ற தலைப்பில் அஞ்சல் உறை மற்றும் முத்திரை வெளியிடப்பட்டது.

கோவை : சிங்காநல்லூர் குளத்தின் பல்லுயிர் தன்மையை கவுரவப்படுத்தும் வகையில் 'நகரத்தின் சொர்க்கம், சிங்கநல்லூர் குளம்' என்ற தலைப்பில் அஞ்சல் உறை மற்றும் முத்திரை வெளியிடப்பட்டது. 

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் குளம், பல்லுயிர்கள் சுற்றுச்சூழலை சமநிலையில் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. சிங்காநல்லூர் குளத்தில் நகர்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு மண்டல முதலாம் ஆண்டு விழாவினை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் உறை மற்றும் சிறப்பு அஞ்சல் முத்திரையானது கோவை மாநகராட்சி மற்றும் இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து வெளியிடப்பட்டது.

சிங்காநல்லூர் குளத்தின் மகிமையை கவுரவப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் கே.பாலசுப்பிரமணியன் 'நகரத்தின் சொர்க்கம், சிங்கநல்லூர் குளம்' என்ற தலைப்பில் அஞ்சல் உறை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன், சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் காந்திமதி, தமிழ்நாடு முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் கே.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 



மேலும், இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது ;- கடந்த ஜனவரி 2018 முதல் கோவை மாநகராட்சியுடன் இணைந்து 3000 -க்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இயற்கை பற்றிய கல்வியானது இக்குளத்தில் வைத்து கற்றுத்தரப்பட்டு வருகின்றது. இம்மாணவர்களுக்கு இயற்கை பற்றிய குறும்படங்கள் திரை இட்டு காட்டவும், மழை மற்றும் வெயிலில் இருந்து பாதுகாத்து ஒரு இடத்தில் அமர்த்திக் கற்று தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இயற்கையுடன் இணைந்தபடி, இயற்கை மற்றும் பறவைகள் விளக்க கூடம் ஒன்று சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில், கோவை மாநகராட்சியுடன் இணைந்து நகர்புற இயற்கை விளக்க மற்றும் கல்வி மையம் அடிக்கல் நாட்டி தொடங்கப்படவுள்ளது இக்குளப்பகுதிக்கு சிறப்பு சேர்ப்பதாக அமையும். 

மேலும், இத்தருணத்தில் சிறப்பு வாய்ந்த சிங்காநல்லூர் குளத்தின் முக்கியத்துவத்தைச் சிறப்பிக்கும் விதமாக ஒரு சிறப்பு அஞ்சல் உறை மற்றும் சிறப்பு அஞ்சல் முத்திரையானது கோவை மாநகராட்சி மற்றும் இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து வெளியிடுவது நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாக அமையும். 

இக்குளத்தின் சிறப்பம்சங்கள் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களை தன்பால் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை, "இவ்வாறு அவர் பேசினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...