சிங்காநல்லூர் குளத்தின் உயிர் பன்மை சூழலைப் பாதுகாக்க நன்னீர் பாதுகாப்புத் திட்டம் தொடக்கம்

கோவை : சிங்காநல்லூர் குளத்தில் நகர்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு மண்டல முதலாம் ஆண்டு விழாவினை முன்னிட்டு ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நன்னீர் மீன்கள் பாதுகாப்புத் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

கோவை : சிங்காநல்லூர் குளத்தில் நகர்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு மண்டல முதலாம் ஆண்டு விழாவினை முன்னிட்டு ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நன்னீர் மீன்கள் பாதுகாப்புத் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் குளத்தில் இன்று நன்னீர் மீன்கள் பாதுகாப்புத்திட்டத்தினை தொடங்கி வைத்த அமைச்சர் பேசுகையில், "பல்லுயிர்கள் சுற்றுச்சூழலை சமநிலையில் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இயற்கை சூழல் மற்றும் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு வருவதே, நகர்புறத்தில் பல்லுயிர்கள் குறைந்து வருவதற்கான முக்கிய காரணமாகும். கோவையில் நொய்யலை ஆதாரமாகக் கொண்டு நகர்புற சூழலில் அமைந்துள்ள சிங்காநல்லூர் குளத்தில் கடந்த 10 வருடங்களுக்கு மேல் நடத்தப்பட்ட ஆய்வில் 720 வகையான பல்லுயிர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. 

அதில் மிகவும் முக்கியமாக 200 வகையான மூலிகை செடிகள், 10 வகையான அழியும் தருவாயில் உள்ள பறவைகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வேண்டிய நிலையில் உள்ள நன்னீர் ஆமைகளின் வாழ்விடமாக இந்தக் குளம் உள்ளது. இதில் முக்கியமாக சிங்காநல்லூர் குளம் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக நகர்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு மண்டலம் ஆக இந்திய அரசியலமைப்புச்சட்டம், 1992 மற்றும் கோவை மாநகராட்சி சட்டம், 1981 கீழ் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, அதன் ஒராண்டு நிறைவடைந்து விட்டது. இத்தருணத்தில் சிறப்பு வாய்ந்த சிங்காநல்லூர் குளத்தின் முக்கியத்துவத்தைச் சிறப்பிக்கும் விதமாக ஒரு சிறப்பு அஞ்சல் உறை மற்றும் சிறப்பு அஞ்சல் முத்திரையானது கோவை மாநகராட்சி மற்றும் இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து வெளியிடுவது நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாக அமையும். இதனால் இக்குளத்தின் சிறப்பம்சங்கள் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களை தன்பால் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை. 

சிங்காநல்லூர் குளத்தின் உயிர் பன்மை சூழலைப் பாதுகாக்க வியாபார நோக்கில் மீன் பிடிப்பது டிசம்பர் மாதத்தோடு தடை செய்யப்படவுள்ளது. மேலும், நமது பகுதிகளில் உள்ள குளம் மற்றும் குட்டைகளில் காணப்படும் அழிந்து வரக்கூடிய நாட்டு வகை நன்னீர் மீன்களை இயற்கைச் சூழலில் பாதுகாத்து, அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் ஏதுவாகக் கோவை நன்னீர் மீன்கள் பாதுகாப்பு திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது," என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன், சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் காந்திமதி, தமிழ்நாடு முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் கே.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...