உயா்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளின் போராட்டம் வாபஸ்

திருப்பூர் : விளை நிலங்கள் வழியே உயா்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதி்ர்ப்பு தெரிவித்து நடைபெற்று வந்த விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

திருப்பூர் : விளை நிலங்கள் வழியே உயா்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதி்ர்ப்பு தெரிவித்து நடைபெற்று வந்த விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 8 மாவட்டங்களில் விளைநிலங்கள் வழியாக உயர்மின் அழுத்தக் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட உள்ள விவசாயிகள் இணைந்து கடந்த 17 -ம் தேதி போராட்டத்தை தொடங்கினர். அடுத்தடுத்து நூதனமான முறையில் தொடர்ந்த இந்த போராட்டம் இன்று 14 -வது நாளாக நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, தூக்குப் போடும் போராட்டம், காய்கறிகளைத் தூக்கிலிட்டு போராட்டம் முதலியவற்றை அடுத்து இன்று விவசாயிகள் மொட்டை அடித்து போராட்டம் நடத்தினர். இதற்கிடையில், விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தையும் தொடங்கி 8 நாட்களாகிறது. ஆனாலும், தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை, எந்த விதமான அழைப்பும் விடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர். 



எனவே, ஜனவரி 3 -ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக சென்று கோட்டையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், அதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் காத்திருப்பு மற்றும் பல போராட்டங்களை வாபஸ் பெறுவதாகவும் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் ராஜாமணி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் இயக்கத்தலைவர் ராஜாமணி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளுக்குப் பழரசம் கொடுத்து உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தை நிறைவு செய்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...