சிறந்த சேவைக்காக குன்னூர் வெலிங்டன் கன்டோன்மெண்ட் வாரியத்திற்கு விருது

கோவை : பொதுமக்கள் சேவையில் சிறந்தது விளங்கியதற்காக முதல் முறையாக குன்னூர் வெலிங்டன் கன்டோன்மெண்ட் பாதுகாப்பு அமைச்சக விருதினை பெற்றுள்ளது.

கோவை : பொதுமக்கள் சேவையில் சிறந்தது விளங்கியதற்காக முதல் முறையாக குன்னூர் வெலிங்டன் கன்டோன்மெண்ட் பாதுகாப்பு அமைச்சக விருதினை பெற்றுள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் கன்டோன்மெண்ட்  நிர்வாகங்களைத் தேர்ந்தெடுத்து  ஆண்டுதோறும் விருதுகள் வழங்குவது  வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான பொது மக்களுக்கான சேவை பிரிவில் சிறந்த விளங்கியதாக குன்னூர் வெலிங்டன் கன்டோன்மெண்ட் போர்ட் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்திய ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் குன்னூர் வெலிங்டன் கன்டோன்மெண்ட் போர்ட் இயங்குகிறது. இது முதல் முறையாக  சிறந்த கன்டோன்மெண்ட்டாக இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு அமைச்சக விருது விழா, புதுடெல்லி தேசிய பாதுகாப்புத்துறை பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. அவ்விழாவில் பங்குபெற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விருதினை வழங்கினார். 

இந்த விருதினை கன்டோன்மெண்ட் முதன்மை நிர்வாக அதிகாரி பி.ஹரீஷ் வர்மா, பொறியாளர் சுரேஷ், சுகாதார மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன், கன்டோன்மெண்ட் துணைத்தலைவர் பாரதியார், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் கன்டோன்மெண்ட் ஊழியர்கள் பெற்றுக்கொண்டனர். 

மேலும், கணினி உள்ளிட்ட புதிய தொழில் நுட்பம் மூலம் பொதுமக்களுக்கு சேவை புரிந்து சிறப்பாகச் செயல்பட்ட காரணத்திற்காக இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...