திண்டுக்கல் : பழனியில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி ரோட்டரி சங்கம் மற்றும் காவல்துறை இணைந்து மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

பழனி ஆர்.எப். சாலையில் தொடங்கிய போட்டிகளை டிஎஸ்பி., விவேகானந்தன் தொடங்கி வைத்தார். பெண்களுக்கு மூன்று கிலோ மீட்டர் தூரமும், ஆண்களுக்கு ஆறு கிலோ மீட்டர் தூரமும் போட்டிக்கான தூரமாக நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் பங்கேற்போருக்கு வழி நெடுக குடிநீர் வழங்கப்பட்டது. முழு சுற்றை முடிக்கும் வகையில் பாதி தூரத்தில் போட்டியாளர்களுக்கு வர்ணம் பூசப்பட்டது. ஆர்.எப்.ரோட்டில் துவங்கிய போட்டிகள் பைபாஸ் ரோடு, திண்டுக்கல் ரோடு வழியாக பேருந்து நிலையம் வந்து நிறைவு பெற்றது.

போட்டியில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

போட்டியின் முடிவில் பெண்கள் பிரிவில் பொள்ளாச்சியை சேர்ந்த ரிதன்யஶ்ரீ முதலிடமும், ஆண்கள் பிரிவில் சேலத்தை சேர்ந்த பாலச்சந்திரன் முதலிடமும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட்டது.