கோவை : தேக்கம்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்த மக்கள், கட்டிய ஒரே மாதத்தில் பழுதான பொதுகழிப்பிடத்தை சுகாதார அசௌகிரியத்தை முன்னிட்டு பூட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது குரும்பனூர் கிராமம். இங்கு பொதுக்கழிப்பிடம் இல்லாத காரணத்தினால் பலரும் திறந்த வெளியினை கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனர். இதனையடுத்து, ஊராட்சி நிர்வாகம் சார்பில் குரும்பனூர் கிராமத்தில் ரூ4.5 லட்சம் செலவில் பொதுக்கழிப்பிடம் கட்டும் பணி தொடங்கியது.

இந்நிலையில், புதிய கழிப்பிட கட்டிடம் குரும்பனூர் கழிவு நீர் ஓடும் ஓடைப்பள்ளத்தில் கட்டப்படுவதால், நீர்தேங்கி பாதிப்பு ஏற்படும் என உள்ளூர் கிராம மக்கள் பலமுறை எடுத்துக்கூறியுள்ளனர். அதனைப் பொருட்படுத்தாத ஊராட்சி நிர்வாகம் பொதுக்கழிப்பிடத்தை கடந்த மாதம் கட்டி முடித்தது. ஆடவர் மற்றும் மகளிருக்கு தலா நான்கு என்ற கணக்கில் 8 கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதற்கிடையே, தனியே துணி துவைக்கும் பகுதியுடன், எப்போதும் தண்ணீர் வசதி இருக்கும் வகையில் கடந்த மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இப்பொதுக்கழிப்பிடம் திறக்கப்பட்டது.
இந்த பொது கழிப்பறைகளில் இன்னும் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. மேலும், கழிப்பிட கட்டிடத்தின் தரைதளம் மற்றும் கழிப்பிட பேசின் போன்றவை தரமாக அமைக்கப்படாத காரணத்தினால், கட்டி முடித்த ஒரே மாதத்தில் சேதமடைந்து உடைந்து போயின. இதற்கிடையில், கழிவுநீர் உள்ளேயே தேங்கி கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தொடர்ந்து இந்த பொதுக்கழிப்பிடத்தை பயன்படுத்தினால் நோய்கள் பரவும் எனக் கருதிய ஊர்மக்கள், அதிருப்தியில் கழிப்பறையை பூட்டுப் போட்டு பூட்டிவிட்டனர். இதன் காரணமாக மீண்டும் அப்பகுதி மக்கள் திறந்த வெளியினை கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பொதுக்கழிப்பிடம் கட்டியும் பலனில்லை என்ற கிராம மக்களின் வேதனைக் குறித்து தேக்கம்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்ட போது, விரைவில் பொதுக்கழிப்பிடம் சீரமைக்கப்பட்டு மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என தெரிவித்தனர்.