கோவையில் திறந்த புல்வெளிகளில் சவாலான சூழ்நிலைகளோடு வாழப் போராடும் பறவைகள்

கோவை : பெருகிவரும் மானுடவியல் அழுத்தம் காரணமாகவும், தொடர்ச்சியாகச் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாலும், கோவையில் திறந்த புல்வெளிகளில் வாழும் பறவைகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன. இப்புதிய சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு ஏற்றபடி தங்களைத் தகவமைத்துக் கொண்டு வாழத் தொடர்ச்சியாக போராடி வருகின்றன.



கோவை : பெருகிவரும் மானுடவியல் அழுத்தம் காரணமாகவும், தொடர்ச்சியாகச் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாலும், கோவையில் திறந்த புல்வெளிகளில் வாழும் பறவைகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன. இப்புதிய சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு ஏற்றபடி தங்களைத் தகவமைத்துக் கொண்டு வாழத் தொடர்ச்சியாக போராடி வருகின்றன.

இதையடுத்து, பறவையாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வறண்ட புல்வெளிகளில் ஒரு ஆய்வை நடத்தினர். அந்த ஆய்வு மனிதர்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை சமாளிக்க மற்றும் சுழலியலில் ஏற்படும் மாற்றங்களைச் சமாளிக்க பறவைகள் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளையும் வெளிப்படுத்தியுள்ளது. 

கோவை பறவையியலாளர் கே.செல்வகணேஷ், அவர்களது குழு கோவையைச் சுற்றியுள்ள உலர் புல்வெளிகளோடு வாழும் பறவை இனங்களின் பன்முகத்தன்மை மற்றும் அச்சுறுத்தல்கள் பற்றி அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் ஆய்வு நடந்ததாகக் கூறினார். இதற்காக கோவையில் உள்ள வறண்ட புல்வெளி நிலப்பரப்புடன் காணப்படும் பத்து இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறினார். 

அந்த ஆய்வில், பிளிச்சி புல்வெளி, காமாட்சிபுரம் புல்வெளி, கள்ளிப்பாளையம் புல்வெளி, வெள்ளணைப்பட்டி புல்வெளி, கணியூர் புல்வெளி, சின்னியம்பாளையம் புல்வெளி, பீளமேடு புல்வெளி, பாப்பம்பட்டி புல்வெளி, கல்லமடைத் தோட்டம் புல்வெளி மற்றும் கோவை மலை புல்வெளி ஆகிய புல் தரைப்பகுதிகள் ஆய்வுப் பகுதிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டன. 

மேலும், இது குறித்து செல்வ கணேஷ் கூறுகையில், "இந்த பத்து இடங்களில் செய்யப்பட்ட பறவைகள் பார்வையிடுதல்கள் 2018 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் படிப்படியாக செய்யப்பட்டன. ஒவ்வொரு இடத்திலும் குறைந்தபட்சம் ஒரு நாள் பயணமும், ஒரு இரவு நேர பயணமும் மேற்கொள்ளப்பட்டன. ஆரம்ப ஆராய்ச்சியில் மொத்த எண்ணிக்கையில் 1126 பறவைகளில் 88 பறவையினங்கள் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. இது தவிர 28 இனங்கள் மற்றும் 247 பறவைகள் இரவுநேர கண்காணிப்புகளில் கிடைத்தன.

தலையாட்டும் மரங்கொத்தி, சாம்பல் கீச்சான், மான்டேகு பூனைப்பருந்து , வெள்ளை தொண்டை உடைய ஹியூம்ஸ், சைக்கஸ் வாட்ப்லர், ரிச்சர்ட் நெட்டைக்காலி மற்றும் பிளைத் நெட்டைக்காலி போன்ற வெளிநாட்டு பறவைகள் உட்பட சில இந்தியப் பறவைகளையும் நாங்கள் கண்டோம். மேலும், அங்கு கல்குருவி, செவ்வயிற்றுக் கல்கவுதாரி, கொம்பன் ஆந்தை, வெள்ளைக்கண் வைரி மற்றும் கருநெஞ்சுக் காடை போன்ற உள்நாட்டுப் பறவைகள் காணக் கிடைக்கின்றன," என்றார்.



மேலும், அவர் இரவு நேர பறவைகளான ஆந்தை, இந்திய மயில், ரெட்-வாட்டல் லாபிவிங், இந்திய நைட்ஜார் மற்றும் இந்திய திக் நீ போன்றவையும் அங்கிருந்தன எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான கே.பவி, தான் பார்த்த ஒவ்வொரு புல்வெளியிலும், மக்கள் குடியிருப்பு மற்றும் வணிக குறுக்கீடு மற்றும் மனித ஊடுருவல் ஆகியவை பறவைகளின் முக்கிய அச்சுறுத்தல்களாக உள்ளன எனக் கூறினார். 

"காமாட்சிபுரம் புல்வெளிக்கு அருகிலுள்ள ஒரு இடத்தில், ஆழ்துளைக் கிணறு தோண்டும் கனரக வண்டிகளின் மிகுந்த டெசிபல் சத்தம் ஒலி மாசுபாட்டை உண்டாக்கி வருகின்றன. கள்ளிப்பாளையம் அருகே வேறொரு இடத்தில், ஒரு பெரிய குடியிருப்பு திட்டம் மிகவும் நெருக்கமாக வந்துவிட்டது. இது போலவே, தார் சாலைகள் சுற்றுச்சூழல் சமநிலையை வெகுவாகப் பாதிக்கின்றன. 



பீளமேடு புல்வெளி பகுதிக்கு அருகிலிருக்கும் விமான ஓடுபாதை, அனைத்துச் சுற்றுப்புறங்களிலும் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள், வாகன பந்தயங்களினால் வரும் இரைச்சல் மற்றும் தூசி மாசுபாடு ஆகியவற்றால் அங்கு புல் தரைகள் பாழ்படுகின்றன. கலங்கல் எனும் பகுதிக்கு அருகில் உள்ள மற்றொரு புல்வெளியில், கல்குருவி மற்றும் செவ்வயிற்றுக் கல்கவுதாரி பறவைகள் வருகின்றன. இதற்கிடையில், அப்பகுதியில் நாள் முழுவதும் ஒரு மதுபானக் கடை பகல்நேரத்திலும், இரவு நேரத்திலும் இயங்கி வருகிறது. இவை எல்லாம் ஆபத்தான மனித நடவடிக்கைகளுக்கு வழிவகுத்துள்ள காரணிகள்," என்கிறார் பவி.

பறவைகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து அருள் செல்வன் பேசுகையில், "சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் இந்த முக்கிய இடங்களைப் பாதுகாக்க அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். பறவைகளுக்கு நேரடி அச்சுறுத்தல்கள் இருந்தாலும்கூட, தங்கள் பயணத்தைத் தொடர ஒவ்வொரு முயற்சியும் எடுத்து, அவை உயிர்ப்புடன் பறக்கின்றன. இது பறவைகள் கண்காணிப்பாளர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கு ஊக்கமளிக்கிறது," என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...