போராட்டத்தை கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் முன்வர வேண்டும் : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

திருப்பூர் : விளைநிலங்கள் வழியே மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் விவசாயிகள், போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பூர் : விளைநிலங்கள் வழியே மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் விவசாயிகள், போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசு சார்பில் ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெறவுள்ளது. இதில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழிலகங்களில் முதலீட்டினை பெருமளவில் உருவாக்கிடும் வகையில் மாவட்டம்தோறும் கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் நடைபெற்ற கருத்தரங்கில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் 

உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். 



அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- இம்முறை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் திருப்பூர் தொழில்துறையினர் மூலம் 3,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதில், 520 தொழில் முனைவோர்களிடமிருந்து 2,600 கோடி அளவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் திருப்பூர் தொழில்துறையினரின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. மத்திய வேளாண்மைத்துறை அமைச்சரிடம் தமிழக கால்நடை பராமரிப்பு துறைக்கென 940 கோடி திட்டங்களுக்கான தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன. இதில், சேலத்தில் உலக தரம் வாய்ந்த கால்நடை பூங்கா அமைக்க 360 கோடியும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கால்நடை பராமரிப்பு கட்டிடம், மருத்துவமனை உபகரணங்கள் வாங்க 325 கோடி என பல்வேறு திட்டங்களுக்கு நிதி கேட்கப்பட்டுள்ளது.

விவசாய நிலங்கள் வழியே மின் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்காக பலமுறை அரசு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. மீண்டும் பேச்சுவார்த்தைக்கு மின்சாரத்துறை அமைச்சர் அழைத்துள்ளதால், விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு சுமூக உடன்பாட்டிற்கு வர வேண்டும், என்றார். 

மேலும், ஜனவரி 3 ஆம் தேதி விவசாயிகளின் சட்டசபை முற்றுகை போராட்டம் குறித்த கேள்விக்கு, அவர்கள் வரும்போது பார்த்துக்கொள்ளலாம், என அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் , திருப்பூர் தொழில்துறையினர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...