கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குற்ற சம்பவங்கள் குறைவு : ஐ.ஜி. பெரியய்யா பெருமிதம்

கோவை : கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கோவை : கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கோவை பந்தய சாலையில் உள்ள மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் இன்று பெரியய்யா செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் கூறியதாவது :- கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொலை, ஆதாயக் கொலை, கொலை முயற்சி, சங்கிலி பறிப்பு கொள்ளை போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு 265 ஆக இருந்த கொலை வழக்கு இவ்வாண்டு 254 ஆகவும், சென்றாண்டு 20 ஆக இருந்த ஆதாய கொலை வழக்கு இவ்வாண்டு 16 ஆகவும், 213 ஆக இருந்த கொலை முயற்சி வழக்குகள் இவ்வாண்டு 165 ஆகவும், மொத்த திருட்டு வழக்குகள் 2,276 லிருந்து 2,125 ஆகவும் குறைந்துள்ளது. 

அதேபோல, 2017-ல் 25 ஆக இருந்த பாலியல் வன்கொடுமை வழக்கு இவ்வாண்டு 20 ஆகவும், வரதட்சணை வழக்கு 7 லிருந்து 6 ஆகவும், பெண்களுக்கு எதிரான வழக்குகள் 554லிருந்து 537ஆக குறைந்துள்ளது.

களவு வழக்குகள் 2017ஆம் ஆண்டில் 2,276 லிருந்து இந்தாண்டு 2,125 ஆக குறைந்துள்ளது. அதேபோல, களவுப்போன ரூ. 16.60 கோடி சொத்து மதிப்பில் ரூ.12.96 கோடி மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. 

வாகன விபத்து வழக்குகளை பொறுத்தவரையில் இறப்பு வழக்குகள் 29.27% , மொத்த வழக்குகளில் 6% குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 272 ஆக இருந்த போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 305 ஆக அதிகரித்துள்ளது. இந்தாண்டு 1,24,783 உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டதில், 99,919 உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 6,65,235 ஹெல்மெட் அணியாமல் சென்றதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், தர்மபுரி 1,21,321 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8 மாவட்டங்களில் முதன்மையாக உள்ளது. 

தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் 203 பேரை மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளோம். புத்தாண்டு தின விழாவை பொறுத்தமட்டில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி இரவு இளைஞர்கள் ஜாலி ரைடு , மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் போன்றவற்றை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். புத்தாண்டையொட்டி பாதுகாப்பு பணிகளுக்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...