40 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த முன்னாள் எம்.பி.ஏ. மாணவர்கள் சந்திப்பு

கோவை: கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியின் எம்.பி.ஏ. முன்னாள் மாணவர்கள் 40 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் குடும்பத்துடன் சந்தித்த நெகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றது.


கோவை: கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியின் எம்.பி.ஏ. முன்னாள் மாணவர்கள் 40 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் குடும்பத்துடன் சந்தித்த நெகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றது.



கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் (பி.எஸ்.ஜி.) தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த நிகழ்வில், 1978 ஆம் ஆண்டு எம்.பி.ஏ. பிரிவு மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். அன்றைய காலத்தில் சென்னை மற்றும் கோவையில் மட்டுமே எம்.பி.ஏ. படிக்க இயலும் சூழல் இருந்த நிலையில், கோவை தனியார் கல்லூரியில் பயின்ற 31 பேர் என அனைத்து மாணவர்களும் இந்த சந்திப்பு நிகழ்வில் தவறாமல் கலந்துகொண்டனர். 



மேலும், தங்களது திறமைகள், ஆங்கில புலமை, படிப்பில் ஈடுபாடு, ஒழுக்கம் என அனைத்து வகையிலும் தங்களுக்கு இந்த கல்லூரி மிகவும் உதவியதை நினைவுகூரும் வகையிலும், இந்த கல்லூரியில் பயின்றதால் வாழ்க்கையில் பெரிய இடத்திற்கு சென்றதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த சந்திப்பு நிகழ்வை நடத்தியதாக கூறும் முன்னாள் மாணவர்கள், தற்போது இந்த கல்லூரியில் பயிலும் எம்.பி.ஏ., மாணவர்களை சந்தித்து செய்ய வேண்டியவை, வாழ்க்கையில் கற்க வேண்டியவை குறித்து பேசும் கலந்துரையாடல் நிகழ்வும், கோவை பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராயவும், வகுக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர். இந்த 31 மாணவர்களில் சிலர், ஐ.ஏ.எஸ்.,உள்ளிட்ட அரசு நிர்வாகத்தில் மிக உயர்ந்த பொறுப்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...