பழனியில் முருகன் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்த குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு

திண்டுக்கல் : பழனி மலைக் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, குரங்குகளை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர்.


திண்டுக்கல் : பழனி மலைக் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, குரங்குகளை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர்.

பழனி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது, சபரிமலை சீசன் மற்றும் தைப்பூச திருவிழா தொடங்க உள்ளதையொட்டி, பழனி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை குரங்குகள் பிடுங்கிச் செல்வது அதிகரித்துள்ளது. குரங்குகளால் சிலநேரங்களில் பக்தர்களுக்கு காயம் ஏற்படுவதுமுண்டு. இதனால், குரங்குகளைப் பிடிக்க கோவில் நிர்வாகம்‌ முடிவு‌ எடுத்தது.

அதன்படி, வனத்துறை சார்பில் கூண்டுகள் வைக்கப்பட்டு குரங்குகளை பிடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. கூண்டில் உள்ள பழங்களை எடுப்பதற்காக திரண்ட குரங்குகள் ஒவ்வொன்றாகப் பிடிக்கப்பட்டது. சுமார் 50-க்கும் மேற்பட்ட குரங்குகளை பிடித்த வனத்துறையினர் கொடைக்கானல் சாலையில் உள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். தொடர்ந்து மலைக்கோவில் பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "குரங்குகள் யாரையும் தாமாக கடிப்பதில்லை. யாரேனும் அதனை துன்புறுத்த முயன்றால் மட்டுமே கடிக்கின்றன. எனவே, கோவிலுக்கு வரும் பக்தர்கள் குரங்குகளை துன்புறுத்தும் செயல்களில் ஈடுபடாமல் இருந்தாலே, அவற்றால் அவர்களுக்கு தொந்தரவு கிடையாது," என்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...