கோவை : மதுக்கரை பகுதியில் இருந்து வனத்துறையினரால் சிறைபிடிக்கப்பட்ட காட்டு யானை மகாராஜாவின் 2-ம் ஆண்டு நினைவஞ்சலி போஸ்டரை ஒட்டி, அப்பகுதி மக்கள் தங்களது பாசத்தை வெளிக்காட்டியுள்ளனர்.

அண்மையில் தடாகம் பகுதியில் அட்டகாசம் செய்து வந்ததாக விநாயகன் என்ற காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு, பிடித்துச் சென்று முதுமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். என்னதான் பயிர்களை அழித்து சேதம் ஏற்படுத்தி வந்தாலும், மனிதர்களை தாக்காமல் பாதுகாப்பு மிருகமாகவே விநாயகன் திகழ்ந்து வந்ததாக அப்பகுதி மக்கள் நினைவு கூறி வருகின்றனர்.

மேலும், விநாயகன் பிடித்துச் செல்லும் போது, லாரியில் நின்று தனது தும்பிக்கையை ஓங்கி நன்றி தெரிவித்தது போல் காட்டியது. இதையடுத்து, கடந்த சில தினங்களாகவே விநாயகனைப் பற்றியே சமூக வலைதளங்களிலும், மக்களிடையேயும் பேச்சு நிலவி வந்தது.
இந்த நிலையில், மதுக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டையன் என்கிற மதுக்கரை மகாராஜாவிற்கு கண்ணீர் அஞ்சலி என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு ஜுன் மாதம் 19-ம் தேதி பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களுக்கு பிறகு, மதுக்கரையில் பயிர்களை சேதப்படுத்தி வந்த மகாராஜா என்ற யானை வனத்துறையினரால் மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்டது. பின்னர், பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் வனத்துக்கு உட்பட்ட வரகளியார் முகாமில் இறந்தது. இந்த சம்பவத்தால், வனத்துறையினரை பொதுமக்கள் வசைபாடித் தீர்த்தனர்.
பயிர்கள் போன்ற விவசாயிகளின் சொத்துக்களை சேதப்படுத்தி இருந்தாலும், மகாராஜா யானை மதுக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இதற்கு சான்றுதான் 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது.
இந்த நிலையில், கேரள மாநில நாளிதழ்களில், கோலகொல்லி என்ற காட்டு யானையைப் போன்றது அல்ல விநாயகன் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, கொலகொல்லி என்றால் திருவனந்தபுரம் பெப்பாரா வனவிலங்கு சரணாலயம் பகுதி மக்களுக்கு நினைவிற்கு வருவது மிகப்பெரிய உருவம் கொண்ட காட்டு யானையாகும். இந்த யானை கடந்த 2016-ம் மனித - விலங்கு மோதலில் ஈடுபட்டதால், வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, யானைகள் பயிற்சி முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டது. ஆனால், அங்கு சில தினங்களிலேயே உயிரிழந்தது. ஆனால்,கொலகொல்லி யானையுடன் விநாயகன் ஒப்பிடுகையில், மனிதர்களை இது தீண்டவே இல்லை என்பதுவே உண்மையாகும்.
மேற்குறிப்பிட்டுள்ள 3 யானைகள் மட்டுமே பயிர்களை அழித்து வருவதில்லை. அனைத்து காட்டு யானைகளும் பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கைதான். தற்போது, தடாகம் பகுதியில் சின்னதம்பி என்ற காட்டு யானை உலா வந்து கொண்டிருக்கிறது. சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி வந்தாலும், காட்டு யானைகளுக்கு பொதுமக்கள் பெயரிட்டு அழைப்பதிலேயே, வனவிலங்குகள் - மனிதர்களுக்கு இடையிலான உறவு வெளிப்படுகிறது.
உதாரணத்திற்கு, முத்தங்கா வனஉயிரின சரணாலத்திற்குட்பட்ட வயநாடு பகுதியைச் சேர்ந்த கல்லூர் கொம்பன் என்ற காட்டு யானை, அங்குள்ள மக்களிடையே நெருங்கி பழகி வருகிறது. குழந்தைகளின் கையில் இருந்து உணவுகளைப் பெற்று உண்ணும் அளவிற்கு மனிதர்களுடன் சகஜனமான உறவைப் பேணி காத்து வந்தது. இந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு பிடிக்கப்பட்டது. இதேபோல, நீலகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற ரிவால்டோ என்ற யானைக்கு துதிக்கையில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து, வனத்துறையினரால் சிறை பிடிக்கப்பட்டது.
என்னதான் பயிர்களைச் சேதப்படுத்தி வரும் காட்டு யானைகள் பொதுமக்களுடன் நட்புறவிலேயே இருந்து வந்துள்ளன. எனவே, யானைகளை அதன் இருப்பிடத்தில் இருந்து பிடித்துச் செல்வதன் மூலம் மனித-விலங்குகள் மோதல் தடுக்கும் என்ற எண்ணத்தை கைவிட்டுவிட்டு, மனிதர்கள்-விலங்குகள் ஒரே இடத்தில் எந்தவித இழப்பும் இன்றி வாழ முடியும் என்பதை உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து அனுபவ வல்லுநர்கள் கூறுகையில், "யானைகள் உணவுகளை தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து பயிர்களை அழித்து வருகிறது. எனவே, அவற்றிற்கு தேவையான உணவுகள் வனங்களிலேயே கிடைக்கும் வகையில் வகை செய்தால், குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைகள் நுழையாது," என்கின்றனர்.